உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சமாதானம் பேச அழைத்து சென்று வாலிபரை கொன்ற நண்பர்கள் மதுபோதை முன்விரோதத்தால் விபரீதம்

சமாதானம் பேச அழைத்து சென்று வாலிபரை கொன்ற நண்பர்கள் மதுபோதை முன்விரோதத்தால் விபரீதம்

ராமநாதபுரம்:-ராமநாதபுரத்தில் மது போதையில் ஏற்பட்ட முன்விரோதத்தில் வாலிபரை பேச்சுவார்த்தைக்கு அழைத்துச் சென்ற நண்பர்கள் வெட்டிக்கொலை செய்தனர். இதில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.ராமநாதபுரம் பாத்திமா நகர் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த கண்ணன் மகன் விஷால் 25. மீன் மார்க்கெட்டில் கூலி வேலை செய்தார். இவருக்கும் சில நண்பர்களுக்கும் மது அருந்திய போது போதையில் தகராறு ஏற்பட்டது.இதையறிந்த கண்ணன் மகன் விஷாலை கண்டித்து, அவர்களுடன் பழகக் கூடாது என தடுத்துள்ளார். இதனால் விஷால் நண்பர்களுடன் பேசாமல் இருந்துள்ளார்.இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு 9:00 மணிக்கு ராமநாதபுரம் வடக்கு தெரு தெட்சிணாமூர்த்தி மகன் முனீஸ்வரன் 24, வண்டிக்காரத்தெரு கணேசன் மகன் ரஞ்சித் ஆகியோர் விஷால் வீட்டிற்கு வந்தனர். விஷாலிடம் பிரச்னையை பேசி தீர்க்கலாம் என அழைத்துச் சென்றனர். விஷால் நீண்ட நேரமாக வீட்டிற்கு வராத நிலையில் அல்லிக்கண்மாய் சுடுகாடு அருகே தகராறு நடப்பதாக அப்பகுதி சிவக்குமார், விஷாலின் தந்தை கண்ணனுக்கு அலைபேசியில் தெரிவித்தார். கண்ணன் மூத்த மகன் சவரணக்குமாரை துணைக்கு அழைத்துக்கொண்டு அங்கு சென்றார். அப்போது விஷாலை முனீஸ்வரனும், ரஞ்சித்தும் அரிவாளால் வெட்டினர். தப்பி ஓடியவரை விரட்டி வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடினர். முனீஸ்வரனை ராமநாதபுரம் பஜார் போலீசார் கைது செய்தனர். ரஞ்சித்தை தேடி வருகின்றனர்.----------


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி