வி.ஏ.ஓ.,க்களை மிரட்டிய மர்ம நபருக்கு வலை
திருவாடானை:ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி, திருவாடானை தாலுகாவில் பணியாற்றும் 14 வி.ஏ.ஓ.,க்களை அலைபேசியில் தொடர்பு கொண்ட ஒருவர் , லஞ்ச ஒழிப்புத்துறையில் இருந்து பேசுவதாகவும், தங்கள் மீது புகார் வந்துள்ளதால் நடவடிக்கை எடுக்காமல் இருந்த பணம் வேண்டும் எனக்கூறி மிரட்டியுள்ளார். இதுகுறித்து அவர்கள் லஞ்ச ஒழிப்பு போலீசில் தெரிவித்துள்ளனர்.லஞ்சஒழிப்புத்துறை போலீசார் கூறுகையில் ' இச்சம்பவம் குறித்து தகவல் கிடைத்துள்ளது. அந்த எண்ணில் தொடர்பு கொண்டு பேசியுள்ளோம். ஆன்லைனில் புகார் செய்யப்பட்டுள்ளது. விசாரித்து வருகிறோம் 'என்றனர்.