டூவீலரில் பின்னால் அமர்ந்து சென்றவர் பலி
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் உப்பூர் அருகே கடலுாரை சேர்ந்தவர் சாந்தகுமார் 38, இவர் ஓட்டிச் சென்ற டூவீலரின் பின்னால் சித்துார்வாடி ஆறுமுகம் 46, அமர்ந்து சென்றுள்ளார். இருவரும் ஹெல்மெட் அணியவில்லை. உப்பூர் பகுதியில் உறவினர் வீட்டு விசேஷத்தில் கலந்து கொண்டு இரவு 9:30 மணிக்கு கிழக்கு கடற்கரை சாலை வழியாக இருவரும் ஊர் திரும்பினர். டூவீலரை ஓட்டிச் சென்ற சாந்தகுமார் அதிகளவு மது அருந்தியிருந்ததால் டூவீலர் ரோட்டோரத்தில் இறங்கி விபத்திற்குள்ளானது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த ஆறுமுகம் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தார். சாந்தகுமார் சிகிச்சையில் உள்ளார். திருப்பாலைக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.