உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சர்ச் திருவிழா நடத்துவதில் பிரச்னை: சமாதான கூட்டம்

சர்ச் திருவிழா நடத்துவதில் பிரச்னை: சமாதான கூட்டம்

திருவாடானை,- சர்ச் திருவிழாவில் இரு தரப்பினரிடையே பிரச்னை ஏற்பட்டதால் சமாதானக் கூட்டம் நடத்தப்பட்டது.தொண்டி அருகே முகிழ்த்தகம் கிராமத்தில் புனித செபஸ்தியார் சர்ச் உள்ளது. இந்த சர்ச் திருவிழா இன்று (மே 1) கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதில் ஒரு தரப்பினர் தங்களை ஒதுக்கி வைத்து திருவிழா நடத்துவதாக தெரிவித்தனர். பிரச்னை ஏற்பட்டது.இது சம்பந்தமாக நேற்று முன்தினம் திருவாடானை தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் கார்த்திகேயன் தலைமையில் சமாதான கூட்டம் நடந்தது. அதில் யாரையும் ஒதுக்கி வைக்காமல் ஒற்றுமையாக திருவிழா நடத்த வேண்டும். தேவையற்ற சட்டம்-ஒழங்கு பிரச்னை ஏற்பட்டால் போலீசார் மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.சுடுகாட்டை பூட்டி வைத்ததாக ஒரு தரப்பினர் கொடுத்த மனு மீது விசாரணை செய்ய குழு அமைக்கப்படும். அக் குழுவில் வருவாய்த்துறையினர், போலீசார் இடம் பெறுவார்கள். அவர்கள் விசாரணை செய்து கொடுக்கும் அறிக்கையை கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.தற்போது உண்மை நிலவரம் தெரியாமல் எந்த முடிவுக்கும் வர இயலாது என அதிகாரிகள் தரப்பில் பேசி முடிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை