உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மகளிர் போலீஸ்ஸ்டேஷன் காம்பவுண்ட் சுவர் இல்லை

மகளிர் போலீஸ்ஸ்டேஷன் காம்பவுண்ட் சுவர் இல்லை

திருவாடானை: பெண்கள் போலீஸ் ஸ்டேஷனை சுற்றி காம்பவுண்ட் சுவர் இல்லாததால் பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது.திருவாடானை அருகே சின்னக்கீரமங்கலத்தில் மகளிர் போலீஸ்ஸ்டேஷன் உள்ளது. திருவாடானை, தொண்டி, எஸ்.பி.பட்டினம், ஆர்.எஸ்.மங்கலம், திருப்பாலைக்குடி ஆகிய போலீஸ்ஸ்டேஷன்களுக்கு உட்பட்ட பெண்கள் சார்ந்த வழக்குகள் மற்றும் குடும்ப வழக்குகள் விசாரிக்கப்படுகிறது.இந்த ஸ்டேஷனை சுற்றிலும் காம்பவுண்ட் சுவர் இல்லை. கிராமப்புற பகுதியாக இருப்பதால் கால்நடைகள் சென்று ஸ்டேஷனுக்கு முன்பு அசுத்தம் செய்கிறது. பின்புறம் சீமைகருவேல மரங்கள் அடர்ந்து காணப்படுகிறது. ஆகவே போலீஸ்ஸ் டேஷனை சுற்றிலும் காம்பவுண்ட் சுவர் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்