உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / அரசு அலுவலக சுற்றுச்சுவர்களில்சுவரொட்டிகள் ஒட்டுவது அதிகரிப்பு

அரசு அலுவலக சுற்றுச்சுவர்களில்சுவரொட்டிகள் ஒட்டுவது அதிகரிப்பு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அரசு அலுவலக சுற்றுச் சுவர்களில்சுவரொட்டிகள் ஓட்டுவது அதிகரித்துள்ளது.பொதுவாக பிளக்ஸ் பேனர், சுவரொட்டிகள் வைப்பதற்கு அரசு சிலகட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ராமநாதபுரத்தில் அதனைபின்பற்றாமல் அனுமதியின்றி ரோட்டோரத்திலும், நடுவே உள்ள சென்டர் மீடியன்களிலும் சுவரொட்டிகளை கண்டபடிஒட்டுகின்றனர்.குறிப்பாக கலெக்டர் அலுவலகம் வளாகத்தில் கருவூலம் சுற்றுச்சவர், தாலுகா அலுவலகம், நகராட்சி பள்ளி சுற்றுச்சுவர், பஸ் ஸ்டாண்ட் அருகேபஸ் நிறுத்தங்கள் பிளக்ஸ் பேனர் மற்றும் அதிகளவில் சுவரொட்டிகள் ஒட்டியுள்ளனர்.நெடுஞ்சாலையில் வாகனங்கள் வேகமாக செல்லும் போது சுவரொட்டிகளால் கவனச்சிதறல் ஏற்பட்டு விபத்து நடக்கவாய்ப்புள்ளது. ஆகையால் நகரில் போக்குவரத்து மிகுந்த ரோட்டோரங்கள் மற்றும் அரசு சுவர்களில் ஒட்டியுள்ள சுவரொட்டிகளை அகற்ற கலெக்டர் கலெக்டர் விஷ்ணுசந்தரன் உத்தரவிட வேண்டும்.-------


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ