உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / அழகன்குளம் பஸ் ஸ்டாப்பில் கழிப்பறை வசதி தேவை

அழகன்குளம் பஸ் ஸ்டாப்பில் கழிப்பறை வசதி தேவை

தேவிபட்டினம்: தேவிபட்டினம் அருகே அழகன்குளம் பஸ் ஸ்டாப் பகுதியில் பொதுக் கழிப்பறை வசதி இல்லாததால் பயணிகள் சிரமப்படுகின்றனர்.தேவிபட்டினம் அருகே அழகன்குளம் பஸ் ஸ்டாப்பில் இருந்து ஐந்துக்கும் மேற்பட்ட கிராமத்தினர் பஸ் ஏறி செல்கின்றனர். இதனால் தினமும் ஏராளமானோர் வந்து செல்லும் பகுதியாக உள்ளது. இப்பகுதியில் உள்ள வங்கி, தபால் நிலையம் உள்ளிட்ட சேவைகளை பெறுவதற்காக வெளியூர்களில் இருந்து ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.இந்நிலையில் அப்பகுதியில் பொது கழிப்பறை வசதி இல்லாததால் அப்பகுதிக்கு வரும் பெண்கள் சிரமம் அடைகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் அழகன்குளம் பஸ் ஸ்டாப் பகுதியில் பொதுக் கழிப்பறை வசதி ஏற்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்