உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தக்காளி வரத்து குறைவால் கிலோ ரூ.90க்கு  விற்பனை

தக்காளி வரத்து குறைவால் கிலோ ரூ.90க்கு  விற்பனை

ராமநாதபுரம், : ராமநாதபுரத்திற்கு வெளியூர்களில் இருந்து வரத்து குறைவால் தக்காளி விலை அதிகரித்து கிலோ ரூ.90 வரை விற்கப்படுகிறது.ராமநாதபுரம் மாவட்டத்தில் காய்கறி, பழங்கள் குறைந்த அளவே சாகுடி செய்யப்படுகிறது. இதன் காரணமாக பெரும்பாலான காய்கறி, பழங்களை மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வாங்கி வந்து வியாபாரிகள் ராமநாதபுரம் அரண்மனை சந்தை பகுதியில் விற்கின்றனர்.தற்போது தக்காளி வெளியூர்களில் இருந்து வரத்து இல்லாமல் விலை அதிகரித்துள்ளது.கடந்த மாதம் கிலோ ரூ.40 முதல் ரூ.50க்கு விற்றது தற்போது ரூ.90க்கு விற்கப்படுவதாக வியாபாரிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்