| ADDED : ஜூன் 22, 2024 04:51 AM
ராமநாதபுரம்: ராமாதபுரம் முகமது சதக் தஸ்தகீர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஜூனியர் ரெட்கிராஸ் அமைப்பில் உள்ள பள்ளி பொறுப்பாளர்களுக்கு ஒரு நாள் பயிற்சி முகாம் நடந்தது.முதன்மைக் கல்வி அலுவலர் (பொறுப்பு) பிரின்ஸ் ஆரோக்கிய ராஜ் தலைமை வகித்தார்.மாவட்ட கல்வி அலுவலர்கள் இடைநிலை சுதாகர் தனியார் பள்ளிகள் நாகேந்திரன், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் முருகம்மாள் முன்னிலை வகித்தனர். ஜூனியர் ரெட்கிராஸ் மாவட்ட கன்வீனர் ரமேஷ் வரவேற்றார்.இதில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி மாவட்ட தலைவர் சுந்தரம், பள்ளி துணை ஆய்வாளர்கள் ராமமூர்த்தி, தட்சிணாமூர்த்தி ஆகியோர் இந்த ஆண்டுக்கான ஆசிரியர்கள் பள்ளியில் ஜூனியர் ரெட்கிராஸ் செயல்பாடுகள் பற்றி விரிவாக எடுத்துரைத்தனர்.மாநில பயிற்சியாளர் ஜீவா, முதல் உதவி பயிற்சியாளர் அலெக்ஸ், பொருளாதார பயிற்சியாளர் சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் இந்தியன் ரெட் ரோஸ் பொருளாளர் குணசேகரன், திருப்புல்லாணி ஜீவா மற்றும் 249 பள்ளிகளில் இருந்து ஜே.ஆர்.சி., பொறுப்பு ஆசிரியர்கள் பங்கேற்றனர்.