உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சத்துணவு அமைப்பாளர் சமையலர்களுக்கு பயிற்சி

சத்துணவு அமைப்பாளர் சமையலர்களுக்கு பயிற்சி

ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் திருவாடானை வட்டாரத்திற்கு உட்பட்ட சத்துணவு அமைப்பாளர்கள், சமையலர்களுக்கு ஆர்.எஸ்.மங்கலம் யூனியன் அலுவலகத்தில் உணவு பாதுகாப்புத் துறை சார்பில் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில் மாணவர்களுக்கு உணவு சமைக்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்தும், பாதுகாப்பாக உணவுப் பொருட்களை கையாள்வது, சமையலறை சுத்தம் மற்றும் சுற்றுப்புற சுத்தம் உள்ளிட்டவைகள் குறித்தும் ஊழியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் ஜெயராஜ், பயிற்சியாளர் காமேஷ் பால்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ