உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / காப்பர் கம்பி திருடிய மேலும் இருவர் கைது: கார், ரூ.1.95 லட்சம் பறிமுதல்

காப்பர் கம்பி திருடிய மேலும் இருவர் கைது: கார், ரூ.1.95 லட்சம் பறிமுதல்

கமுதி : கமுதி அருகே அதானி சோலார் மின் உற்பத்தி நிலையத்தில் காப்பர் கம்பி திருடியதாக மேலும் இருவரை கைது செய்து கார், ரூ.1.95 லட்சத்தை கமுதி போலீசார் பறிமுதல் செய்தனர்.கமுதி அருகே செங்கப்படை அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அதானி சோலார் மின் உற்பத்தி நிலையம் செயல்படுகிறது. இங்கு கடந்த இரண்டு மாதங்களாக காப்பர் வயர் திருட்டு சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து கமுதி,கோவிலாங்குளம் போலீஸ் ஸ்டேஷனில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கமுதி டி.எஸ்.பி., இளஞ்செழியன் உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து கமுதி, அருப்புக்கோட்டை, சாயல்குடி பகுதிகளில் விசாரணை செய்தனர். பிப்.25ல் புதியம்புத்துாரை சேர்ந்த சந்தோஷ் 22, அசோக் 20, சுடலை மணி 19, கோபி 22, மாரிகண்ணன் 25, சக்திகுமார் 29, நந்தீஸ்வரன் 22, ஆகிய 7 பேரை கைது செய்து ஒரு கார், 300 கிலோ காப்பர் வயரை பறிமுதல் செய்தனர். மேலும் திருட்டில் சம்பந்தப்பட்டவர்களைைபோலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் மேலும் காப்பர் வயர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டிருந்த துாத்துக்குடி மாவட்டம் புதியம்புத்துாரை சேர்ந்த சபின்குமார் 21, சிவராம் 19, ஆகிய இருவரை கைது செய்து அவர்களிடமிருந்து கார், ரூ.1.95 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை