| ADDED : மே 28, 2024 05:16 AM
ஆர்.எஸ்.மங்கலம், : ஆர்.எஸ்.மங்கலம் அருகே ஆனந்துாரில் முன் விரோதத்தில் காரை வழிமறித்து பெண்ணை தாக்கிய வழக்கில் ஆனந்துார் ஊராட்சி செயலர் செய்யது அப்தாகிர், ஊராட்சி தலைவியின் கணவர் மற்றும் மகன் உட்பட 30க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிந்த போலீசார் 7 பேரை கைது செய்தனர்.ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றியம் ஆனந்துார் ஊராட்சிக்கு உட்பட்ட பச்சனத்திக்கோட்டை பகுதியில் பைப் லைன் பதிப்பது தொடர்பாக ஏற்பட்ட பிரச்னையில் மே 5 ல் ஊராட்சி செயலாளர் செய்யது அப்தாகிர் தாக்கப்பட்டார். இது குறித்த புகாரில் அப்பகுதியைச் சேர்ந்த நீதிதேவன் உட்பட சிலர் மீது போலீசார் வழக்கு பதிந்த நிலையில் நீதிதேவன் உள்ளிட்டோர் நீதிமன்றத்தில் ஜாமின் பெற்று ஊர் திரும்பினர். இந்நிலையில், நீதி தேவன் தனது சகோதரி கலா மற்றும் குடும்பத்தினருடன் உறவினர் வீட்டு விசேஷத்திற்கு காரில் சென்றனர்.முன்விரோதம் காரணமாக ஊராட்சி செயலாளர் செய்யது அப்தாஹிரின் ஆதரவாளர்கள் 50-க்கும் மேற்பட்டோர் காரை வழிமறித்து கார் கண்ணாடியை உடைத்து கலா, நீதி தேவன் மற்றும் காரில் இருந்தவர்களை தாக்கி ரகளையில் ஈடுபட்டனர்.இதனால் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்படும் சூழல் உருவாகியது. இதுகுறித்து கலா புகாரில் ஆனந்துார் ஊராட்சி செயலாளர் செய்யது அப்தாகிர் 24, ஊராட்சி தலைவியின் கணவர் அத்தாகீர் 68, மகன் நாசிர் உசேன் 45, பள்ளிவாசல் தெரு உமர் அலி 32, முஜிபு, மகாதீர், இப்ராஹிம் உட்பட 30-க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.இவர்களில் ஆனந்துாரை சேர்ந்த சாகுல் ஹமீது மகன் முகமது ஹனிபா 24, ஷேக் அப்துல்லா மகன் இம்ரான் கான் 19, முத்து முகமது மகன் முகமது ஜாபர் இர்பான் 19, சாகுல் ஹமீது மகன் முகமது முக்தார் 32, அப்துல் ஹமீது மகன் முகமது இக்பால் 25, சாகுல் ஹமீது மகன் முபாரக் அலி 42, சகுபர் சாதிக் மகன் முகமது ஜமீல் 21, ஆகிய ஏழு பேரை ஆர்.எஸ்.மங்கலம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.