உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பொய்யாமொழி அம்மன் கோயில் ரோட்டை சீரமைக்க வலியுறுத்தல்

பொய்யாமொழி அம்மன் கோயில் ரோட்டை சீரமைக்க வலியுறுத்தல்

ஆர்.எஸ்.மங்கலம்,- ஆர்.எஸ்.மங்கலம் அருகே வாணியக்குடியில் பிரசித்தி பெற்ற பொய்யாமொழி அம்மன் கோயில் உள்ளது. இளையான்குடி ரோடு காட்டுப்பரமக்குடி விலக்கு வழியாக கோயிலுக்கு செல்வதற்கு ரோடு வசதி உள்ளது. இந்த ரோடு பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து ரோடு குண்டு குழியுமாக உள்ளது.இதனால், கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் சிரமப்படுகின்றனர். ரோட்டில் குறிப்பிட்ட பகுதி ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்கள் என இரண்டு மாவட்ட பகுதிகளை உள்ளடக்கி வருவதால் இந்த ரோட்டை சீரமைப்பதில் அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை என்ற புகார் எழுந்துள்ளது.எனவே, சம்பந்தப்பட்ட இருமாவட்ட துறை அதிகாரிகள் கோயிலுக்கு செல்லும் ரோட்டை சீரமைக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ