உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / வாகவயல் காணிக்கை அன்னை லுார்து அன்னை தேர் பவனி

வாகவயல் காணிக்கை அன்னை லுார்து அன்னை தேர் பவனி

தேவிபட்டினம், : தேவிபட்டினம் அருகே வாகவயல் காணிக்கை அன்னை சர்ச் தேர்ப்பவனி விழா, ஆர்.எஸ்.மங்கலம் அருகே நெடும்புலிக்கோட்டை லுார்து அன்னை சர்ச் தேர் பவனி விழா நடைபெற்றது.விழாவை முன்னிட்டு இருதயபுரம் பங்கு பாதிரியார் ஜெபமாலை சுரேஷ் தலைமையில் பாதிரியார் தாமஸ் ஆல்வா எடிசன் திருவிழா கூட்டு திருப்பலி நிறைவேற்றினார். பின்பு மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் காணிக்கை அன்னை வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.வீதி உலா வந்த காணிக்கை அன்னையை பெண்கள் தெருக்களில் மாக்கோலம் இட்டு வரவேற்றனர். விழாவை முன்னிட்டு இரவில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.*ஆர்.எஸ்.மங்கலம் அருகே நெடும்புலிக்கோட்டை லுார்து அன்னை 67 ஆம் ஆண்டு தேர் பவனி விழா நடந்தது. விழாவை முன்னிட்டு இருதயபுரம் பங்கு பாதிரியார் ஜெபமாலை சுரேஷ், பாதிரியார் குழந்தை இயேசு பாபு திருவிழா கூட்டு திருப்பலி நிறைவேற்றினர். மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் லுார்து அன்னை வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். வீதி உலா வந்த லுார்து அன்னையை தெருக்களில் பெண்கள் மாக்கோலம் இட்டும், கும்மியாட்டம் ஆடியும் வரவேற்றனர். விழாவில் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கிராமத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ