உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மிளகாய் விவசாயிகளுக்கு மதிப்பு கூட்டு கருத்தரங்கம்

மிளகாய் விவசாயிகளுக்கு மதிப்பு கூட்டு கருத்தரங்கம்

கமுதி: கமுதியில் மிளகாய் விவசாயிகளுக்கான மாவட்ட அளவிலான மிளகாய் மதிப்பு கூட்டல்குறித்த கருத்தரங்கம் நடந்தது.கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் தலைமை வகித்தார். வேளாண் இணை இயக்குனர் கண்ணையா, துணை இயக்குனர் மோகன்ராஜ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) பாஸ்கரமணியன் முன்னிலை வகித்தனர். தோட்டக்கலை துணை இயக்குனர் ஆறுமுகம் வரவேற்றார். மிளகாய் சாகுபடி செய்யும் விவசாயிகள் மிளகாய்களை எவ்வாறு மதிப்பு கூட்டு செய்து சந்தைப்படுத்தல், ஏற்றுமதி, பயிர் பாதுகாப்பு, உயிர் தொழில்நுட்ப சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. பின் விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. கமுதி ஊராட்சி ஒன்றிய தலைவர் தமிழ்ச்செல்வி உட்பட வேளாண் துறை அதிகாரிகள், முதுகுளத்துார், பரமக்குடி, கமுதி, கடலாடி பகுதியை சேர்ந்த மிளகாய் விவசாயிகள் கலந்து கொண்டனர். தோட்டக்கலை உதவி இயக்குனர் ரவிக்குமார் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை