உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கார் விபத்தில் வி.ஏ.ஓ, பலி

கார் விபத்தில் வி.ஏ.ஓ, பலி

தேவிபட்டினம்: ஆர்.எஸ்.மங்கலம் சவேரியார் நகரை சேர்ந்தவர் போஸ் 59. முன்னாள் ராணுவ வீரரான இவர் ராணுவப் பணி ஓய்வுக்கு பிறகு பல்வேறு பகுதிகளில் வி.ஏ.ஓ., வாக பணியாற்றி வந்தார். தற்போது சீனாங்குடி குரூப் வி.ஏ.ஓ., வாக பணியாற்றி வந்தார்.நேற்று மாலை 4:30 மணிக்கு காரில் குடும்பத்துடன் ராமநாதபுரம் சென்று விட்டு ஆர்.எஸ்.மங்கலம் திரும்பினார். காரை போஸ் ஒட்டி சென்றார். தேசிய நெடுஞ்சாலையில் நாரணமங்கலம் முத்து சாமிபுரம் அருகே கார் சென்ற போது காரின் முன் பக்க டயர் வெடித்தது.இதில் கார் ரோட்டோரத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில் பலத்த காயம் அடைந்த போஸ் சம்பவ இடத்தில் பலியானார். கருங்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியரான அவரது மனைவி அருள்செல்வி பலத்த காயத்துடன் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.விபத்தில் பலியான வி.ஏ.ஓ., போஸ் இந்த மாதம்(மே 31) இறுதியில் பணி ஓய்வு பெற இருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ