உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / வாழவந்தாள் அம்மன் கோயில் முளைப்பாரி

வாழவந்தாள் அம்மன் கோயில் முளைப்பாரி

முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே பொசுக்குடி கிராமத்தில் வாழவந்தாள் அம்மன் கோயில் பொங்கல், முளைப்பாரி விழா நடந்தது. ஒரு மாதத்திற்கு முன்பு பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்தனர்.தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம் நடந்தது. விநாயகர் கோயிலில் இருந்து கிராமத்தின் முக்கிய விதிகளில் ஆயிரம் கண் பானை, பால்குடம் எடுத்து பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர். வாழவந்தாள் அம்மனுக்கு பால், மஞ்சள், சந்தனம் உட்பட 16 வகை அபிஷேகம், அலங்காரம் நடந்தது. கிராம மக்கள் பொங்கலிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். முளைக்கொட்டு திண்ணையில் இருந்து முளைப்பாரி துாக்கி கிராமத்தின் முக்கிய விதிகளில் ஊர்வலமாக சென்று தண்ணீரில் கரைக்கப்பட்டது. பொசுக்குடி, பொசுக்குடிபட்டி, நீர்க்குன்றம் அதனை சுற்றியுள்ள கிராமமக்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ