உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஒளிரும் விளக்கு, ஸ்டிக்கர் இல்லாத வாகனங்கள்; பரமக்குடி ரோட்டில் விபத்து அபாயம்

ஒளிரும் விளக்கு, ஸ்டிக்கர் இல்லாத வாகனங்கள்; பரமக்குடி ரோட்டில் விபத்து அபாயம்

பரமக்குடி : பரமக்குடிக்கு உட்பட்ட பகுதிகளில் டிராக்டர்கள் மற்றும் சரக்கு வாகனங்களில் பின்புறம் ஒளிரும் விளக்குகள் மற்றும் ஸ்டிக்கர்கள் பொருத்தாத நிலையில் விபத்து அதிகரிக்கிறது.பரமக்குடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் ஏராளமான வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. இதே போல் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. தொடர்ந்து கட்டுமான பொருட்கள் மற்றும் விவசாய பொருட்களை ஏற்றிச் செல்ல பிரதானமாக டிராக்டர்களை பயன்படுத்துகின்றனர். மேலும் குறுகலான பகுதிகளில் செல்லும் வகையில் உள்ள சரக்கு வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. டிராக்டர்களின் பின்புறம் லோடுகளை ஏற்றி செல்ல பயன்படுத்தும் டிரக்குகளின் பின் பகுதிகளில் ஒளிரும் விளக்குகள் மற்றும் ஸ்டிக்கர்களை ஒட்டி வைக்காமல் செல்கின்றனர்.இதனால் இரவு நேரங்களில் இது போன்ற வாகனங்களின் பின்னால் செல்லும் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி மோதும் நிலை உண்டாகிறது. மேலும் தினந்தோறும் கிராம சாலைகள் மற்றும் நான்கு வழி சாலைகளில் விபத்து அதிகரித்து வருகிறது.எனவே மோட்டார் வாகன ஆய்வாளர் மற்றும் போக்குவரத்து போலீசார் வாகனங்களில் பின்புறம் ஒளிரும் விளக்குகளை பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை