உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மஞ்சலோடையை நகராட்சி உடன் இணைக்க கிராம மக்கள் எதிர்ப்பு

மஞ்சலோடையை நகராட்சி உடன் இணைக்க கிராம மக்கள் எதிர்ப்பு

ராமநாதபுரம்: மஞ்சலோடை கிராமத்தை ராமநாதபுரம் நகராட்சி உடன் இணைக்க கூடாது என அப்பகுதி மக்கள் ஆட்சேபனை தெரிவித்துள்ளனர்.கலெக்டர் அலுவலகத்தில் மஞ்சலோடை கிராம மக்கள் கோரிக்கை மனு அளித்தனர். இதில், இளமனுார் ஊராட்சியில் உள்ள மஞ்சலோடை கிராம மக்கள் பலர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் நுாறுநாள் பணிபுரிகின்றனர். இந்நிலையில் ராமநாதபுரம் நகராட்சியில் இணைத்தால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே நகராட்சியுடன் மஞ்சலோடை கிராமத்தை இணைக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும்.தொடர்ந்து இளமனுார் ஊராட்சியில் இருக்க விரும்புகிறோம் என வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ