உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / வாக்காளர் விழிப்புணர்வு

வாக்காளர் விழிப்புணர்வு

முதுகுளத்துார் : முதுகுளத்துார் தாலுகா அலுவலகம், அரசு கலைக் கல்லுாரி மாணவர்கள் சார்பில் தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.தாசில்தார் சடையாண்டி தலைமை வகித்தார். டி.எஸ்.பி., சின்னக்கண்ணு, கல்லுாரி முதல்வர் பாண்டிமாதேவி முன்னிலை வகித்தனர். தேர்தல் பிரிவு துணைத் தாசில்தார் கோகுல்நாத் வரவேற்றார். முதுகுளத்துார் தாலுகா அலுவலகத்தில் இருந்து காந்தி சிலை, பஜார் , பஸ் ஸ்டாண்ட் வரை மாணவர்கள் ஊர்வலமாக சென்றனர்.ராமநாதபுரம் லோக்சபா தேர்தலில் பொதுமக்கள் 100 சதவீதம் வாக்களிப்பது சம்பந்தமாகவும், வாக்களிக்கும் முறைகள் குறித்து துண்டு பிரசுரங்கள் மூலம் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஒருங்கிணைப்பாளர் மகேந்திரன், பேராசிரியர்கள் நிர்மல்குமார், நாகராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ