வளர்பிறை பஞ்சமி பூஜை
உத்தரகோசமங்கை : உத்தரகோசமங்கை வராகி அம்மன் கோயிலில் வளர்பிறை பஞ்சமியை முன்னிட்டு மூலவருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது.கோயில் வளாகத்தில் ஏராளமான பெண்கள் பச்சை விரலி மஞ்சள் அரைத்து நேர்த்திக்கடன் பூஜைகளை நிறைவேற்றினர். நீண்ட வரிசையில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.