உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பாதி ரோடு எங்கே; ராமநாதபுரம் நகரில் அளவில்லா ஆக்கிரமிப்பு*

பாதி ரோடு எங்கே; ராமநாதபுரம் நகரில் அளவில்லா ஆக்கிரமிப்பு*

ராமநாதபுரம், : ராமநாதபுரம் அரமண்னை ரோடு மெயின் பஜார் பகுதிகளான கோட்டை விநாயகர் கோயில், சாலைத்தெரு, பவுண்ட் கடை வீதி, தலைமை தபால் நிலையம் ரோடு, அஹ்ரகாரம் ரோடு, மதுரை ரோடு உள்ளிட்ட இடங்களில் ரோட்டை ஆக்கிரமித்து வியாபாரம் செய்வது, வாகனங்களை நிறுத்துவதால் பாதி ரோடு காணாமல் போகிறது. அளவில்லா ஆக்கிரமிப்புகளால் இவ்விடங்களில் தினமும் போக்குவரத்து நெரிசல் வாடிக்கையாகியுள்ளது.ராமநாதபுரம் அரண்மனை ரோடு, அதனை சுற்றியுள்ள வீதிகளில் ஏராளமான நகைக்கடைகள், வணிக நிறுவனங்கள், பலசரக்கு கடை, வாழை இழை, காய்கறி கடைகள் உள்ளிட்ட பல்வேறு வியாபார நிறுவனங்கள் உள்ளன. மாவட்டம் முழுவதும் இருந்து இங்கு பொருள்கள் வாங்க வருகின்றனர்.இதனால் எப்போதுமே வாகன போக்குவரத்து நிறைந்த இப்பகுதியில் அனுமதிக்கப்பட்ட இடத்தை காட்டிலும் அத்துமீறி சிலர் ரோடு வரை கடைகள் வைத்து வியாபாரம் செய்கின்றனர். குறிப்பாக சாலைத்தெரு, கோட்டை விநாயகர் கோயில் ரோடு, அல்லிக்கண்மாய் ரோடு, பவுண்ட் கடை வீதி உள்ளிட்ட இடங்களில் அளவிற்கு அதிகமாக நடை பாதைகளை ஆக்கிரமித்துள்ளனர். இதனால் நடு ரோட்டில் மக்கள் நடந்து செல்கின்றனர். வேகமாக வரும் வாகனங்களால் விபத்து அபாயம் உள்ளது. அனுமதிக்கப்பட்ட மதிய நேரங்கள் மட்டுமின்றி அனுமதி இல்லாத காலை, மாலை நேரங்களிலும் சரக்கு வாகனங்கள் உள்ளே வந்து செல்வதால் தலைமை தபால்நிலையம், அல்லிகண்மாய் ரோடு உள்ளிட்ட இடங்களில் டவுன் பஸ் வரும் போது கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதுதொடர்பாக பலமுறை மக்கள் புகார் தெரிவித்தும் போலீசார், நகராட்சி நிர்வாகம், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஒருசில இடங்களில் ஆக்கிரமிப்பை அகற்றிவிட்டு அதன் பிறகு கண்டு கொள்வதே இல்லை. இதனால் வாகன ஓட்டிகள், மக்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தினம் தினம் அவதிப்படுவது வாடிக்கையாகியுள்ளது.எனவே மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள அரண்மனை, பவுண்ட்கடை வீதி, கோட்டை விநாயகர் கோயில் ரோடு ஆகிய இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் முன்வர வேண்டும். அதற்கு கலெக்டர் விஷ்ணுசந்தின் உத்தரவிட வேண்டும்.------


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ