உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / அறந்தாங்கி டிப்போவில் அரசு பஸ்சை கடத்தியது யார்? லாரியில் மோதியதில் டிரைவர் கால் முறிந்தது

அறந்தாங்கி டிப்போவில் அரசு பஸ்சை கடத்தியது யார்? லாரியில் மோதியதில் டிரைவர் கால் முறிந்தது

திருவாடானை:புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அரசு பஸ் டிப்போவில் நிறுத்தப்பட்டிருந்த அறந்தாங்கி - திருவாடானை செல்லும் பஸ்சை, நேற்று அதிகாலை 1:30 மணிக்கு ஒருவர் கடத்தினார். கிழக்கு கடற்கரை சாலையில் ராமநாதபுரம் நோக்கி வேகமாக பஸ்சை ஓட்டிச் சென்றார். தொண்டி அருகே வட்டாணத்தில் அதிகாலை 3:00 மணிக்கு, எதிரில் துாத்துக்குடியிலிருந்து மீன் ஏற்றிச் சென்ற லாரி மீது பஸ் மோதியது,இதில், லாரி டிரைவரான துாத்துக்குடியைச் சேர்ந்த முனியசாமி, 27, கால் முறிந்தது. சத்தம் கேட்டு அருகில் குடியிருப்பவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். எஸ்.பி.பட்டினம் போலீசார் விசாரித்தனர்.அறந்தாங்கி டிப்போ அலுவலர்கள் கூறியதாவது:அறந்தாங்கியில் இருந்து காலை 6:30 மணிக்கு புறப்படும் இந்த பஸ் திருவாடானைக்கு 9:30 மணிக்கு சென்றடையும். டிப்போவில் இட வசதி இல்லாததால், சில பஸ்கள் டிப்போவிற்கு வெளியே நிறுத்தப்படும்.கடத்தப்பட்ட இந்த பஸ்சும் வெளியில் நிறுத்தப்பட்டிருந்தது. கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்த போது பஸ் செல்வது தெரிகிறது. விளக்கு வெளிச்சத்தில் டிரைவர் சீட்டில் யார் அமர்ந்திருந்தார் என்று தெரியவில்லை.அதே போல, அறந்தாங்கியிலிருந்து வட்டாணம் வரை ரோட்டோர கண்காணிப்பு கேமராக்களும் ஆய்வு செய்யப்பட்டன. பஸ் வேகமாகச் சென்றதே தவிர, விளக்கு வெளிச்சத்தில் கடத்தியவரை அடையாளம் காண முடியவில்லை.இவ்வாறு அவர்கள் கூறினர்.போலீசார் கூறுகையில், 'விபத்தில் சிக்கிய லாரி டிரைவர் ராமநாதபுரம் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கபட்டுள்ளார். விபத்து நடந்த இடத்தில் பயணியர் நிழற்குடை உள்ளது. அங்கு அமர்ந்திருந்த ஒருவர் தான் பஸ்சை கடத்தினார் என்று அப்பகுதியில் உள்ளவர்கள் தெரிவித்தனர்.'அவர் பார்க்க மன நோயாளி போல உள்ளார். அவரை அறந்தாங்கி பஸ் டிப்போ அலுவலர்கள் அங்கு அழைத்துச் சென்றனர். அறந்தாங்கி போலீசார் விசாரிப்பர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.இச்சம்பவத்தால் கிழக்கு கடற்கரை சாலையில் மூன்று மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை