உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / அரசத்துார் ஊராட்சி அலுவலகத்தில் காலி குடத்துடன் பெண்கள் முற்றுகை

அரசத்துார் ஊராட்சி அலுவலகத்தில் காலி குடத்துடன் பெண்கள் முற்றுகை

திருவாடானை:திருவாடானை அருகே அடுத்தகுடி கண்மாய்க்கரை குடியிருப்பிற்கு ஓராண்டாக குடிநீர் சப்ளை இல்லாததால் அப்பகுதி பெண்கள் காலி குடங்களுடன் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.அரசத்துார் ஊராட்சி அடுத்தகுடி கண்மாய்க்கரை குடியிருப்பில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். பல மாதங்களாக குடிநீர் சப்ளை இல்லாததால் அப்பகுதி மக்கள் நேற்று அரசத்துார் ஊராட்சி அலுவலகத்தை காலி குடங்களுடன் முற்றுகையிட்டனர். பெண்கள் கூறுகையில், இங்குள்ள தெருக்குழாய்களில் இரவு நேரங்களில் எப்போதாவது தண்ணீர் வரும். பாதுகாப்பு இல்லாத நிலை இருப்பதால் காத்திருந்து தண்ணீர் சேகரிக்க முடியாது. கண்மாய், ஊருணிகளில் தேங்கியிருக்கும் நீரை பயன்படுத்தினோம்.நீர் நிலைகள் வற்றி விட்டதால் பெரும் சிரமமாக உள்ளது. நீண்ட துாரத்தில் உள்ள பெருவாக்கோட்டைக்கு சென்று தள்ளுவண்டிகளில் குடங்களை வைத்து குடிநீர் சேகரிக்கிறோம். ஊராட்சி தலைவரிடம் பலமுறை முறையிட்டும் பயனில்லாததால் அலுவலகத்தை முற்றுகையிட்டோம். அடுத்தகட்டமாக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட உள்ளோம் என்றனர். அதனை தொடர்ந்து அரசத்துார் ஊராட்சி தலைவர் முருகேஸ்வரியின் கணவர் சரவணன் சென்று குடிநீர் சப்ளை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ