உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஊருணியில் மூழ்கி தொழிலாளி பலி

ஊருணியில் மூழ்கி தொழிலாளி பலி

பரமக்குடி : பரமக்குடி அருகே முதலுார் கிராம ஊருணியில் மூழ்கிய கூலி தொழிலாளி பலியானார். போகலுார் ஒன்றியம் முதலுார் கிராமத்தைச் சேர்ந்தவர் வடிவேலன் 48. கூலி வேலை செய்து வந்தார். மூன்று நாட்களுக்கு முன் வீட்டை விட்டு சென்றவர் காணாமல் போனார். இவரது மனைவி மீனாள் மற்றும் 20 வயது மகளுடன் 15 ஆண்டுகளாக பிரிந்து வாழ்கின்றனர்.இந்நிலையில் கூலி வேலை பார்த்து தனியாக வீட்டில் இருந்துள்ளார். அடிக்கடி வலிப்பு நோய் வரும் நிலையில் பிப்.,20 மாலை ஊருணியில் குளிக்க சென்றவர் நீச்சல் தெரியாததால் மூழ்கி இறந்துள்ளார். யாரும் தேடாத நிலையில் ஊருணியில் உடல் மிதப்பதை பார்த்து கிராம மக்கள் போலீசுக்கு தெரிவித்தனர். சத்திரக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ