திரவுபதி அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா
ஆர்.எஸ்.மங்கலம், : ஆர்.எஸ்.மங்கலம் திரவுபதி அம்மனுக்கு நடைபெற்ற மஞ்சள் நீராட்டு விழாவில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.ஆர்.எஸ்.மங்கலம் திரவுபதி அம்மன் கோயில் விழா ஆக.9 ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. 25 நாட்கள் நடைபெறும் விழாவில் தினமும் பல்வேறு கிராம மண்டகப்படி நிகழ்வுகளாக சக்தி கரகம், தருமர் பிறப்பு , கிருஷ்ணர் பிறப்பு, திரவுபதி திருக்கல்யாணம், சக்ராபர்ணா கோட்டை,சுபத்திரை கல்யாணம், அபிமன்யு பிறப்பு, தவசு கடப்பலி, படுகளம் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றன. தொடர்ந்து முக்கிய விழாவான பூக்குழி விழா ஆக.30 நடைபெற்றது. அதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் இரவில் மூலவர் அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து பக்தர்கள் வழிபாடு செய்தனர்.இரவு 11:30 மணிக்கு முக்கிய வீதிகள் வழியாக சுவாமி ஊர்வலம் நடைபெற்றது. பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். செப்.3 ல் நடைபெறும் பட்டாபிஷேக விழாவுடன் இக்கோயில் விழா நிறைவடைகிறது. ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.