உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சாயல்குடி அருகே விஷம் சாப்பிட்டதால் 10 ஆடுகள் பலி

சாயல்குடி அருகே விஷம் சாப்பிட்டதால் 10 ஆடுகள் பலி

சாயல்குடி : ராமநாதபுரம் மாவட்டம் எஸ். மாரியூரில் மேய்ச்சலுக்கு சென்ற இடத்தில் விஷம் சாப்பிட்ட ஆடுகள் 10 ஆடுகள் உயிரிழந்தன.சாயல்குடி அருகே எஸ். மாரியூரை சேர்ந்தவர் முன்னாள் ஊராட்சி தலைவர் கன்னியம்மாள். இவரது கணவர் சண்முகவேல். இவர்களுக்கு சொந்தமான 10 வெள்ளாடுகள் நேற்று காலையில் வயல்வெளியில் மேய்ச்சலுக்கு சென்றன. பின்னர் மாலை 5:00 மணிக்கு திரும்பும்போது வீட்டு வாசலில் ஒவ்வொன்றாக துடிதுடித்து உயிரிழந்தன. விசாரணையில் ஆடுகள் மேய்ந்த இடத்தில் மர்ம நபர்கள் விஷம் வைத்திருந்ததும், அவற்றை சாப்பிட்டதால் உயிரிழந்ததும் தெரிய வந்தது. இதில் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். சாயல்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை