உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / வேளாண் வளர்ச்சி திட்டத்தில் 10 ஊராட்சிகள்

வேளாண் வளர்ச்சி திட்டத்தில் 10 ஊராட்சிகள்

திருவாடானை : திருவாடானை வட்டாரத்தில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் 10 ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.திருவாடானை வேளாண் அலுவலர்கள் கூறியதாவது: திருவாடானை வட்டாரத்தில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டப் பணிகள்துவங்கியுள்ளது. இத்திட்டத்தில் கடம்பூர், பாகனுார், ஓரியூர், ஆண்டாவூரணி, பனஞ்சாயல், அச்சங்குடி, ஆதியூர், கருமொழி, பழங்குளம், கட்டிவயல் ஆகிய 10 ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.இத்திட்டத்தின் கீழ் தனிநபர் தரிசு நிலங்களை முட்புதர்களை அகற்றி உழவு செய்து சாகுபடி மேற்கொள்ள ஒரு எக்டேருக்கு மானியமாக ரூ.9600 வழங்கப்படுகிறது. தேர்வு செய்யப்பட்ட விவசாயிகள் உழவன் செயலி வாயிலாகவும், உதவி வேளாண்மை அலுவலரை தொடர்பு கொள்ளலாம்.இந்த ஊராட்சிகளை சேர்ந்த விவசாயிகள் அரசு அறிவித்துள்ள மானிய திட்டங்களை பயன்படுத்தி பயன்பெறலாம் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை