உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மிளகாய் சாகுபடி காப்பீட்டுத் தொகை கிடைக்காமல் 10 கிராம மக்கள் அவதி

மிளகாய் சாகுபடி காப்பீட்டுத் தொகை கிடைக்காமல் 10 கிராம மக்கள் அவதி

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம்தரைக்குடி குரூப்பில் கடந்த ஆண்டு 2023 மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 2500 ஏக்கர் மிளகாய் சாகுபடிக்குரிய காப்பீடு இழப்பீட்டு தொகை கிடைக்காமல் 10 கிராம மக்கள் பாதிக்கப்பட்டுஉள்ளனர்.கடலாடி ஊராட்சி ஒன்றியம் எஸ்.தரைக்குடி குரூப் உட்பட்ட செவல்பட்டி, முத்துராமலிங்கபுரம், வாலம்பட்டி, கொண்டுநல்லான்பட்டி, கொக்கரசன் கோட்டை, டி.கரிசல்குளம், வெள்ளையாபுரம், டி.எம்.கோட்டை, செஞ்சடைபுரம், பிச்சையாபுரம், அண்ணபூவாநாயக்கன்பட்டி, வ.சேதுராஜபுரம், உச்சிநத்தம் ஆகிய இடங்களில் 2500 ஏக்கரில்குண்டுமிளகாய் மானாவாரியாக சாகுபடி செய்கின்றனர். 2023ல் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கால் மிளகாய் செடிகள் நீரில் மூழ்கிவிட்டதால் 2000 ஏக்கர் வரை பாதிக்கப்பட்டது. வருவாய்த் துறையினர், வேளாண் துறையினர் கணக்கெடுத்தனர். இருப்பினும் காப்பீட்டுத் தொகை இதுவரை வழங்க வில்லை. இதனால் நடப்பாண்டில் பலர் மிளகாய் சாகுபடியை கைவிட்டுஉள்ளனர். தரைக்குடி குரூப் விவசாயிகள் கூறுகையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களில் 5 ஏக்கருக்கு மட்டும் வெள்ள நிவாரணம் வழங்கினர். ஏக்கருக்கு ரூ.30ஆயிரம் செலவழித்து 20 முதல் 30 ஏக்கர் வரை மிளகாய் சாகுபடி செய்தவர்கள் ரூ.பல லட்சத்தை இழந்துள்ளனர். எனவே உடனடியாக மிளகாய் சாகுபடிக்குரிய இழப்பீட்டு தொகையை காப்பீட்டு நிறுவனம் வழங்க வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை