மேலும் செய்திகள்
ரத்த தானம் செய்த கலெக்டர் அலுவலகப் பணியாளர்கள்
24-Jul-2025
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துாரை சேர்ந்த 100 வயதானமுதியவர் வேலு பட்டா மாறுதல் வழங்க வலியுறுத்தி பலஆண்டுகளுக்கு மேலாக அலைந்து சிரமப்படுவதாக கலெக்டரிடம் புகார் தெரிவித்தார். முதுகுளத்துார் தாலுகா வாரியங்கூட்டம் கிராமத்தை சேர்ந்த தற்போது 100 வயதான முதியவர் வேலு என்பவர் தனது மகன்முருகேசன் உதவியுடன் ராமநாதபுரம் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங்காலோனிடம் பட்டா மாறுதல் வழங்க கோரி மனு அளித்தார். அதன் பிறகு முதியவர் வேலு சார்பில் மகன் முருகேசன்கூறியதாவது: மேலக்கொடுமலுார் குரூப்பில் எனது தந்தைக்கு பாட்டிதான செட்டில்மென்ட் எழுதி கொடுத்த 5.5 ஏக்கர் நிலம் உள்ளது. 2018ல் முதல் பட்டா மாற்றம் செய்து தரக்கோரி தாலுகா அலுவலகம், ஆர்.டி.ஒ., அலுவலகம் என தொடர்ந்து அலைந்து வருகிறோம். பட்டா மாற்ற முடியவில்லை. பட்டா மாறுதல் வழங்க வலியுறுத்தி விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு அளிக்க வந்தேன் கலெக்டர் உதவி செய்ய வேண்டும் என்றார்.
24-Jul-2025