உள்ளூர் செய்திகள்

1008 சங்காபிஷேகம்

உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை அருகே எக்ககுடியில் தஞ்சாக்கூர் சூட்டுக்கோல் செல்லப்ப சுவாமியின் ஜீவசமாதி கோயில் உள்ளது. இங்கு சித்திரை அமாவாசையை முன்னிட்டு நேற்று 1008 சங்குகள் சிவலிங்க வடிவத்தில் அலங்கரிக்கப்பட்டு சங்குகளில் புனித நீர் ஊற்றப்பட்டது.ஹோம வேள்வி வளர்க்கப்பட்டு வேத மந்திரங்கள் முழங்கப்பட்டன. மதியம் மூலவருக்கு சங்காபிஷேகம் செய்து, அலங்காரத்தில் தீபாராதனைகள் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !