உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / திருவாடானை கோயிலில் 108 மூலிகை அபிேஷகம்

திருவாடானை கோயிலில் 108 மூலிகை அபிேஷகம்

திருவாடானை : திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் நேற்று ஆதிரெத்தினேஸ்வரருக்கு 108 வகையான மூலிகைகளால் சிறப்பு அபிேஷகம் நடந்தது. மஞ்சள், தேன், பஞ்சாமிர்தம், சந்தனம், விபூதி, நெய், பால். தண்ணீர் போன்ற 108 வகையான மூலிகைகளால் அபிேஷகம் நடந்தது. முன்னதாக மூலிகை நிரப்பிய குடங்களை சுமந்து ஏராளமான பக்தர்கள் ஊர்வலமாக சென்றனர். சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க சுவாமிக்கு அபிேஷகம் நடந்தது. அன்னதானம் வழங்கினர். ஏற்பாடுகளை கோவில்பட்டி ஆலவாயர் அருட்பணி மன்றம், திருவாடானை நகர் வளர்ச்சி அறக்கட்டளையினர் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை