உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமேஸ்வரம் மீனவர் 11 பேர் விடுதலை

ராமேஸ்வரம் மீனவர் 11 பேர் விடுதலை

ராமேஸ்வரம்:இலங்கைக்கு பிரதமர் மோடி வருகையையொட்டி நல்லெண்ணம் அடிப்படையில் ராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேரை அந்த நாட்டு அரசு விடுவித்தது. இலங்கையில் 2 நாட்கள் நடக்கும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பிரதமர் மோடி ஏப்., 6ல் அங்கிருந்து ராமேஸ்வரம் மண்டபம் வர உள்ளார். மார்ச் 26ல் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேர் யாழ்ப்பாணம் சிறையில் உள்ளனர். இவர்களை பிரதமர் மோடி வருகையையொட்டி நல்லெண்ணம் அடிப்படையில் இலங்கை அரசு விடுவிக்க உத்தரவிட்டது. அதன்படி நேற்று மதியம் மீனவர்களை யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிபதி நளினி சுபாஸ்கரன் விடுதலை செய்து உத்தரவிட்டார்.பின் மீனவர்கள் கொழும்பு அருகில் உள்ள மெரிகானா முகாமில் தங்க வைக்கப்பட்டனர். இவர்கள் ஓரிரு நாட்களில் விமான மூலம் சென்னை வர உள்ளனர். இலங்கைக்கு பிரதமர் மோடி சென்றதால் எந்த நிபந்தனையும் இன்றி மீனவர்கள் விடுவிக்கப்பட்டதால் அவர்களது குடும்பத்தினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை