பள்ளி வேன் கவிழ்ந்து 12 குழந்தைகள் காயம்
பரமக்குடி: பரமக்குடி அருகே பார்த்திபனுாரில் உள்ள கிரசன்ட் பள்ளி வேன் கவிழ்ந்து 12 குழந்தைகள் காயமடைந்தனர்.பார்த்திபனுாரில் உள்ள கிரசன்ட் தனியார் பள்ளியில் 150 மாணவர்கள் படிக்கின்றனர்.இப்பள்ளி வேன் குழந்தைகளை ஏற்றிய படி கமுதியில் இருந்து பார்த்திபனுார் ரோட்டில் தேவனேரி என்ற இடத்தில் வந்தது. அப்போது வேனுக்கு முன்னால் சென்ற டூவீலரில் மோதாமல் இருக்க டிரைவர் பிரேக் பிடித்த போது வேன் நிலை தடுமாறி அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்ததில் 12 குழந்தைகளுக்கு காயங்கள் ஏற்பட்டது.தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் பரமக்குடி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். இதில் நான்கு குழந்தைகள் தலையில் காயமடைந்த நிலையில் கை, கால் முறிவு ஏற்பட்டது. பார்த்திபனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.இந்நிலையில் பரமக்குடி எம்.எல்.ஏ., முருகேசன் குழந்தைகளை பார்வையிட்டு பழங்களை வழங்கி ஆறுதல் கூறினார். மேலும் அரசு தலைமை டாக்டர் முத்தரசனிடம் சிகிச்சை விவரங்களை கேட்டறிந்தார்.