உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கும்பாபிேஷக விழாவுக்கு 124 கலசங்கள் ஊர்வலம்

கும்பாபிேஷக விழாவுக்கு 124 கலசங்கள் ஊர்வலம்

ஆத்துார், ஆத்துார் பஸ் ஸ்டாண்ட் அருகே, இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள வெள்ளப்பிள்ளையார் கோவிலில் புனரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வரும் நவ., 16ல் கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. அதை முன்னிட்டு, கோவிலில் உள்ள, 3 ராஜகோபுரம், மூலவர் விமானம், முருகன், மகாலிங்கேஸ்வரர், நவகிரக சன்னதிகள், பரிவார தெய்வங்களின் சிறு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில், 16 பெரிய கலசங்கள், 108 சிறு கலசங்கள் என, 124 கலசங்களை பூஜை செய்து, கோவிலில் இருந்து ஆத்துார் நகர் பகுதி முழுதும் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. வழி நெடுக, பக்தர்கள் வழிபட்டனர். இந்த கலசங்கள், நவ., 15ல், கோபுரம் உள்ளிட்ட இடங்களில் அமைக்கப்படும். மறுநாள் கும்பாபிேஷகம் செய்யப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை