உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / இலங்கைக்கு கடத்தப்பட்ட 1839 கி., இஞ்சி பறிமுதல்

இலங்கைக்கு கடத்தப்பட்ட 1839 கி., இஞ்சி பறிமுதல்

ராமநாதபுரம்:தமிழகத்தில் இருந்து இஞ்சி மூடைகள் கடத்தப்படுவதாக இலங்கை கற்பிட்டி போலீஸ் சிறப்பு புலனாய்வு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. நேற்று மாலை கற்பிட்டி போலீசாருடன் இலங்கை சிறப்பு அதிரடி படையினர் இணைந்து இஞ்சி மூடைகளை கடத்திச் செல்லப்படுகிறதா என கண்காணிப்பில் ஈடுபட்டனர்.அப்போது டூவீலரில் சென்ற இருவரை விசாரித்தனர். தமிழகத்தில் இருந்து கடல் வழியாக இஞ்சி மூடைகள் கடத்தி சென்று பின் கரையில் இருந்து லாரி மூலம் கடத்தி செல்வதாக அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து கற்பிட்டி சம்மட்டி வாடி கடற்கரை பகுதியில் இருந்து கொழும்பிற்கு இஞ்சி மூடைகளை கடத்திக் கொண்டு கண்டகுடா பெட்ரோல் பங்க் முன்பு சென்ற லாரியை மறித்தனர். அதில் 45 மூடைகளில் 1839 கிலோ இஞ்சி இருந்தது தெரிய வந்தது.கைப்பற்றப்பட்ட இஞ்சி மூடைகள் இலங்கை மதிப்பின்படி ரூ.90 லட்சம் என போலீசார் தெரிவித்தனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரி, டூவீலரை கட்டுநாயக்கசுங்கத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக கற்பிட்டி போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை