உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தமிழகத்தில் வாகன விபத்தில் 18,704 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் வாகன விபத்தில் 18,704 பேர் உயிரிழப்பு

ராமநாதபுரம் : -தமிழகத்தில் 2023--24ல் இதுவரை வாகன விபத்துக்களில் 18 ஆயிரத்து 704 பேர் பலியாகி உள்ளதாக போக்குவரத்து ஆணையர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.வட்டார போக்குவரத்து அலுவலர்கள், மோட்டார் வாகன ஆய்வாளர்களுக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:தமிழகத்தில் ஓராண்டில் 66,841 சாலை விபத்துக்கள் நடந்துள்ளன. இதில் 17,261 விபத்துக்களில் 18,704 பேர் உயிரிழந்துள்ளனர்.20,938 விபத்துக்களில் 23,269 பேர் காயமடைந்துள்ளனர். 27,335 விபத்துக்களில் 48,999 பேர் சிறு காயமடைந்துள்ளனர். 1307 விபத்துக்களில் உயிரிழப்போ, காயமோ இல்லை.மேலும் 66,841 விபத்துக்களில் 90 சதவீதமான 64 ஆயிரத்து 841 விபத்துக்கள் டிரைவர்களின் கவனக்குறைவால் நடந்துள்ளன.46 ஆயிரத்து 734 பள்ளி வாகனங்களை ஆய்வு செய்ததில் 6754 வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. விதிமீறிய 6754 வாகனங்களுக்கு 1.36 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. வரியாக 20.72 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது.பள்ளி வாகனங்கள் குறித்த ஆய்வுக் குழு அமைக்கப்பட்டு அதன் பரிந்துரைகள் பெறப்பட்டுள்ளன. விரைவில் பள்ளி வாகனங்களுக்கான வழிகாட்டி நெறிமுறைகள் வெளியிடப்படும் என கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை