உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / இளையான்குடி அருகே கண்மாயில் 2 சிறுமியர் பலி

இளையான்குடி அருகே கண்மாயில் 2 சிறுமியர் பலி

இளையான்குடி:சிவகங்கை, ஆழிமதுரை கிராமத்தைச் சேர்ந்த சசிகுமார் மகள் ஷோபிதா, 8. அரசு துவக்கப்பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்தார். கண்ணன் மகள் கிறிஸ்மிகா, 4. அங்கன்வாடி மையத்தில் பயின்றார். இருவரும் நேற்று காலை 10:00 மணிக்கு, பள்ளி மற்றும் அங்கன்வாடிக்கு அருகே உள்ள கண்மாய்க்கு சென்றனர். இருவரும் கண்மாயில் மூழ்கி பலியாகினர். மதியம் 1:00 மணிக்கு குழந்தைகளை அழைத்துச் செல்ல வந்த பெற்றோர் அவர்கள் இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். அருகில் தேடியபோது கண்மாயில் மூழ்கி பலியாகியிருந்தனர். சிறுமியர் உடல்களை மீட்ட பெற்றோர், மக்கள் பள்ளி முன் உடல்களை வைத்து கவனக்குறைவாக இருந்த ஆசிரியர், அங்கன்வாடி ஊழியர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே இறந்த சிறுமியர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் ரூபாய் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை