உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / 2 கி.மீ., நடந்து சென்று சாப்பிடும் மாணவர்கள்

2 கி.மீ., நடந்து சென்று சாப்பிடும் மாணவர்கள்

முதுகுளத்துார்:

சாப்பிட 2 கி.மீ., நடந்து செல்லும் மாணவர்கள்

முதுகுளத்துாரில் படிக்கும் அரசு, தனியார் பள்ளி மாணவர்கள் அரசு விடுதிக்கு 2 கி.மீ., வரை நடந்து சென்று மதியம் சாப்பிடும் மாணவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் பள்ளிக்கு திரும்பி வர முடியாமல் சிரமப்படுகின்றனர்.முதுகுளத்துார்- பரமக்குடி ரோடு ஆற்றுப்பாலம் அருகே மாணவர் விடுதியும், முதுகுளத்துார்- கமுதி ரோடு அரசு பஸ் பணிமனை அருகே மாணவர் விடுதி உள்ளது. இங்கு முதுகுளத்துார் அரசு மேல்நிலைப்பள்ளி, தனியார் மேல்நிலைப்பள்ளியில் இருந்து 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் அரசு விடுதியில் தங்கி படிக்கின்றனர். மதியம் நேரத்தில் உணவு இடைவெளியின் போது சாப்பிடுவதற்காக 2 கி.மீ., வரை நடந்து செல்கின்றனர். இதனால் குறிப்பிட்ட நேரத்திற்கு திரும்பி வர முடியாமல் மாணவர்கள் சிரமப்படுகின்றனர். அப்போது டூவீலர், சரக்கு வாகனங்களை மறைத்து லிப்ட் கேட்கின்றனர். சில நேரங்களில் வாகனங்களில் ஆபத்தான முறையில் பயணம் செய்கின்றனர். மதிய நேரத்தில் அரசு பஸ்கள் இயக்க வேண்டும்.

சாப்பிட 2 கி.மீ., நடந்து செல்லும் மாணவர்கள்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ