உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஏர்வாடி அருகே 20 கிலோ கஞ்சா பறிமுதல்

ஏர்வாடி அருகே 20 கிலோ கஞ்சா பறிமுதல்

ராமநாதபுரம், : ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அருகே பிச்சை மூப்பன் வலசையில் இலங்கைக்கு கடத்த வைத்திருந்த 20 கிலோ கஞ்சா மூடைகள் பறிமுதல் செய்யப்பட்டன.ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா கடல் வழியாக தங்கம், பீடி இலைகள், கஞ்சா, மஞ்சள் உள்ளிட்டவை படகுகளில் இலங்கைக்கு கடத்துவது தொடர்கிறது.இந்நிலையில் ஏர்வாடி அருகே சடைய முனியன் வலசை, பிச்சை மூப்பன் வலசைக்கு இடையில் உள்ள ஏர்வாடி தனியார் தென்னந்தோப்பு அருகில் மண் ரோட்டில் ஒதுக்குப்புறமாக கஞ்சா மூடைகள் கிடந்ததை பார்த்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தெரிவித்தனர்.அங்கு மூடைகளில் இருந்த 20 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த ஏர்வாடி போலீசார் அதனை இலங்கைக்கு கடத்த முயன்றவர்கள் குறித்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !