உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மக்கள் குறைதீர் கூட்டத்தில் 298 பேர் மனு அளித்தனர்

மக்கள் குறைதீர் கூட்டத்தில் 298 பேர் மனு அளித்தனர்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 298 மனுக்கள் பெறப்பட்டன.ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு முன்னிலை வகித்தார். பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 298 மனுக்களை பெற்று அவற்றை விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.முன்னதாக தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் சமூக நலன் மகளிர் உரிமைத்துறை சார்பில் பாலியல் வன்முறைக்கு எதிரான பிரசாரம் கையெழுத்து இயக்கத்தை கலெக்டர் கையெழுத்திட்டு துவக்கி வைத்தார். துணை முதல்வர் உதயநிதியின் சாம்பியன் பவுண்டேசன் சார்பில் விளையாட்டு விடுதி மாணவர்கள் 51 பேருக்கு தலா ரூ.6000 மதிப்புள்ள 'சாம்பியன்ஸ் கிட்' களை கலெக்டர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை கலெக்டர் தனலெட்சுமி, மாவட்ட வழங்கல் அலுவலர் இளங்கோ, மாவட்ட விளையாட்டு அலுவலர் தினேஷ்குமார், சமூக அலுவலர் தேன்மொழி உள்ளிட்ட அலுவலர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை