உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / அரசு பஸ் டிரைவரை தாக்கிய 3 பேர் கைது

அரசு பஸ் டிரைவரை தாக்கிய 3 பேர் கைது

முதுகுளத்துார்: -முதுகுளத்துாரில் இருந்து தஞ்சாவூருக்கு அரசு பஸ் இயக்கப்படுகிறது. நேற்று முதுகுளத்துாரில் இருந்து தஞ்சாவூருக்கு சென்ற அரசு பஸ்சில் புஷ்பவனத்தைச் சேர்ந்த ஜான்போஸ்கோ 47, டிரைவராக சென்றார். அப்போது முதுகுளத்துார்- பரமக்குடி சாலை கீழக்கன்னிச்சேரி அருகே எதிரே வந்த அதே கிராமத்தைச் சேர்ந்த முனியசாமி ஓட்டிவந்த மண் அள்ளும் வாகனத்தை வைத்து வழி மறித்த போது அரசு பஸ் டிரைவர் ஒலி எழுப்பினால் நின்று வர வேண்டும் என்று கூறினார்.அப்போது முனியசாமி தகாத வார்த்தைகளால் பேசிய நிலையில் அதே கிராமத்தைச் சேர்ந்த சந்திரபோஸ், ராம்ராஜ் உட்பட 4 பேர் அரசு பஸ் டிரைவரை கல் வீசித்தாக்கி காயப்படுத்தினர். பஸ் கண்ணாடி உடைந்து சேதமடைந்துள்ளது.டிரைவர் ஜான் போஸ்கோ புகாரில் முதுகுளத்துார் எஸ்.ஜ., சரவணன் 4 பேர் மீது வழக்கு பதிந்து கீழக்கன்னிச்சேரி சேர்ந்த உடையார் மகன் முனியசாமி 35, தமிழன் மகன் சந்திரபோஸ் 30, 15 வயதுடைய ஒருவர் ஆகிய 3 பேரை கைது செய்தனர். டிரைவர் ஜான்போஸ்கோ முதுகுளத்துார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி