கடற்கரையோர தென்னந்தோப்பில் 3 அடி ஆழத்தில் நீர் குட்டைகள் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்கிறது
திருப்புல்லாணி: திருப்புல்லாணி அருகே களிமண்குண்டு கடற்கரையோர பகுதிகளில் ஏராளமான தென்னந்தோப்புகள் உள்ளன.மன்னார் வளைகுடா கடற்கரையில் இருந்து அருகே உள்ள தென்னந்தோப்புகளில் தென்னை மரங்களுக்கான தண்ணீர்தேவைகளை நீர் குட்டைகள் மூலம் பூர்த்தி செய்கின்றனர்.கடற்கரையோரப் பகுதியில் உள்ள தென்னை மரங்களுக்கு தண்ணீர் தேவையை மரத்தின் அருகிலேயே 20 அடி நீளத்திலும் 3 அடி ஆழத்திலும் தண்ணீர் குட்டைக்காக பல இடங்களில் தோண்டி வைத்துள்ளனர்.கடல் அருகே இருந்தாலும் இயற்கையாக அவற்றில் இருந்து நன்னீர் ஊற்றுகள் உருவாகி மழை மற்றும் கோடை காலம் என எல்லா காலங்களிலும் தண்ணீர் அப்பகுதியில் எப்போதும் நிரம்பி காணப்படுகிறது.தென்னை விவசாயிகள் கூறியதாவது: இப்பகுதியில் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய வெறும் மூன்று அடி ஆழத்தில் தண்ணீர் குட்டைகளை ஏற்படுத்தி உள்ளோம். அவற்றில்இருந்து கிடைக்கும் தண்ணீரை தென்னை மரங்களுக்கு பாய்ச்சுகிறோம். உவர் நீராக இல்லாமல் நல்ல நீராகவே கிடைக்கிறது. அவற்றில் நாட்டு ரக மீன்களும் வளர்க்கப்படுகிறது என்றனர்.