உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சிறுமிக்கு பாலியல்  தொல்லை வாலிபருக்கு 3 ஆண்டு ஜெயில்

சிறுமிக்கு பாலியல்  தொல்லை வாலிபருக்கு 3 ஆண்டு ஜெயில்

ராமநாதபுரம்: -ராமநாதபுரம் அருகே புது வலசையில் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த கட்டுமானதொழிலாளிக்கு மூன்றாண்டு ஜெயில் தண்டனை, ரூ.500 அபராதம் விதித்து மாவட்ட மகளிர்விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.புதுவலசையை சேர்ந்த 13 வயது சிறுமியை அதே பகுதி உறவினரான கட்டுமானத் தொழிலாளி ராமகிருஷ்ணன் மகன் கார்த்தீஸ்வரன் 32. இவர் சிறுமிக்கு பாலியல்தொல்லை அளித்துள்ளார். சிறுமியின் தாய் ராமநாதபுரம் அனைத்து மகளிர் போலீசில் 2022 பிப்., ல் புகார் செய்தார். போலீசார் கார்த்தீஸ்வரனை கைது செய்துசிறையில் அடைத்தனர். இந்த வழக்கு ராமநாதபுரம் மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றத்தில்நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கோபிநாத் பாலியல் தொல்லை அளித்த கார்த்தீஸ்வரனுக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.500 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ