உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மீனவர்கள் 30 பேருக்கு ரூ.22.18 லட்சம் அபராதம்

மீனவர்கள் 30 பேருக்கு ரூ.22.18 லட்சம் அபராதம்

ராமேஸ்வரம்: இலங்கை சிறையில் உள்ள ராமேஸ்வரம் மீனவர்கள் 30 பேருக்கு ரூ.22.18 லட்சம் அபராதம் விதித்து விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது. அக்., 9ல் ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 4 படகுகளையும், அதில் இருந்த 30 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து வவுனியா சிறையில் அடைத்தனர். கோர்ட் வாய்தா நாளான நேற்று மீனவர்களை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கை நீதிபதி ரபீக் விசாரித்தார். 26 மீனவர்கள் முதன் முறையாக கைதானதால் அவர்களுக்கு தலா ரூ. 2.5 லட்சம் வீதம் ரூ.65 லட்சம் (இந்திய மதிப்பில் ரூ.18.98 லட்சம்), மீதமுள்ள 4 மீனவர்கள் 2வது முறையாக கைதானதால் தலா ரூ.2.75 லட்சம் வீதம் ரூ. 11 லட்சம் ( இந்திய மதிப்பில் ரூ. 3.20 லட்சம்) ஆக மொத்தம் ரூ.76 லட்சம்(இந்திய மதிப்பில் ரூ.22.18 லட்சம்) அபராதம் விதித்தார். இதனை செலுத்த தவறினால் மீனவர்கள் தலா 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டார். இந்நிலையில் அபராதத்தை உடனே செலுத்தாததால் மீனவர்களை கொழும்பு அருகே வெளிக்கடை சிறையில் போலீசார் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை