உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / 300 ஆண்டுகள் மார்கழி பஜனையில் ராமானுஜர் பஜனை மடக்குழுவினர்

300 ஆண்டுகள் மார்கழி பஜனையில் ராமானுஜர் பஜனை மடக்குழுவினர்

கடலாடி : கடலாடியில் பாமா, ருக்மணி சமேத கிருஷ்ணசுவாமி கோயிலில் 300 ஆண்டுகளாக மார்கழி மாதத்தில் பஜனை பாடி வருகின்றனர்.ராமானுஜ பஜனை மடக்குழுவினர் சார்பில் இங்கு மார்கழி உற்ஸவம் நடக்கிறது. அதனை முன்னிட்டு அதிகாலையில் எழுந்து 5:00 மணிக்கு 20க்கும் மேற்பட்ட பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை ஒன்று கூடி பக்தர்கள் ராம நாம சங்கீர்த்தனம், அனுமன், கிருஷ்ணன் உள்ளிட்ட தெய்வங்களின் பாகவத கீர்த்தனைகளைஇசை முழக்கத்துடன் பாடி வருகின்றனர்.வண்ணக் குடை பிடித்து ஹார்மோனியம், தபேலா, ஜால்ரா, மேளம் உள்ளிட்ட இசைக்கருவிகளை இசைத்து பக்தி பாடல்களை கடலாடி முக்கிய வீதிகளின் வழியாக பாடி வந்து பாமா ருக்மணி சமேத கிருஷ்ணசுவாமி கோயிலில் நிறைவடைகிறது. அங்கு மூலவர்களுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்த பின் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது.ஏராளமானோர் ஆர்வமுடன் மார்கழி மாத பஜனையில் ஈடுபடுகின்றனர். இளம் தலைமுறையினர் ஆன்மிக பாடல்களை எளிதில் அறிந்து, பாடுவதற்கும் வாய்ப்பாக அமைந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை