உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமேஸ்வரம் மீனவர்கள் 34 பேர் கைது

ராமேஸ்வரம் மீனவர்கள் 34 பேர் கைது

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் இருந்து நேற்றுமுன்தினம் 439 விசைப்படகில் மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். இவர்கள் இந்திய- இலங்கை எல்லையில் மீன்பிடித்த போது ரோந்து வந்த இலங்கை கடற்படை வீரர்கள் துப்பாக்கியை காட்டி எச்சரித்து மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் விரட்டினர். மீனவர்கள் கடலில் வீசிய வலையை படகில் இழுத்து வைத்துக் கொண்டு ராமேஸ்வரம் கரை நோக்கி திரும்பினர்.அப்போது 3 படகுகளை பிடித்த இலங்கை வீரர்கள் அதில் இருந்த ராமேஸ்வரம், தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மீனவர்கள் ரூபில்டன் 35, கிறிஸ்டோபர் 33, ஜான் 52, ரீகன் 43, பாலாஜி 20, இன்னாசி ஜென்சன் 42, கிரின்சன் 36, நம்புமணி 26, செந்தில்குமார் 41, சார்லஸ் மிரண்டா 27, மற்றும் டேனியல் 32, அன்னை ஆகாஷ் 31, வினிஸ்டன் 36, அண்ணாதுரை 60, சீனிவாசன் 45, டல்லாஸ் 38, செந்துார்பாண்டி 51, முகமது செபின் 28, முத்துச்சாமி 55, மற்றும் ஏனோக் 22, ஜெயபால் 56, வீரபாண்டி 55, சுரேஷ் 45, அந்தோணிபிரிட்டோ 38, சூசைஅந்தோணி 50, சிவசங்கர் 42, குணசேகரன் 65, முத்து50, அபிஸ்டன் 21, சந்தோஷ் 22, ரெமிஸ்டன் 24, மேக்மில்லன் 28, ஆரோக்கிய ஜோபினர்24, அகரின் 34, ஆகியோரை கைது செய்து கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !