உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / லயன்ஸ் மெட்ரிக் பள்ளியில் 34 வது விளையாட்டு விழா

லயன்ஸ் மெட்ரிக் பள்ளியில் 34 வது விளையாட்டு விழா

பரமக்குடி: பரமக்குடி லயன்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் 34வது ஆண்டு விளையாட்டு விழா நடந்தது.பள்ளி சேர்மன் சவுந்தர நாகேஸ்வரன் தலைமை வகித்தார். செயலாளர் சுப்பிரமணியன், லயன்ஸ் சங்க தலைவர் இளங்குமரன் முன்னிலை வகித்தனர். பள்ளி பொருளாளர் தினகரன் வரவேற்றார்.தனியார் பள்ளிகளின் மாவட்ட ஆய்வாளர் ரவி, ஒலிம்பிக் தீபம் ஏற்றி வைத்து பேசினார். உடற்கல்வி ஆசிரியர் சரவண குமார் விளையாட்டு அறிக்கை வாசித்தார். லயன்ஸ் சங்க செயலாளர் சுப்பையா, பள்ளி முதல்வர் சோபனா தேவி உட்பட நிர்வாகிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். விளையாட்டு போட்டிகள் நடந்தன. விளையாட்டு ஆசிரியர்கள் வளர்மதி, சஞ்சய்துறை ஏற்பாடுகளை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி