உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேர் கைது

ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேர் கைது

ராமேஸ்வரம்:நடுக்கடலில் மீன்பிடித்த ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். மீன்பிடி தடைக்காலம் முடிந்து ஜூன் 15 முதல் மீன்பிடிக்க செல்லும் ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து விரட்டியடித்து, கைது செய்வதால் அச்சத்தில் மீன்பிடிக்க செல்லாமல் முடங்குகின்றனர். இந்நிலையில் நேற்றுமுன்தினம் ராமேஸ்வரத்தில் 520 படகுகளை கரையில் நிறுத்தி, 88 விசைப்படகில் மட்டும் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் இந்திய- இலங்கை எல்லையில் மீன்பிடித்தனர். அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படை வீரர்கள் ஒரு படகையும், அதில் இருந்த மீனவர்கள் தங்கராஜ் 40, லிங்கம் 55, செல்வம் 56, இருளாண்டி 53, ஆகியோரை கைது செய்து மன்னார் மீன்வளத்துறையிடம் ஒப்படைத்தனர். அவர்கள் மீது எல்லை தாண்டியதாக வழக்குப்பதிந்து வவுனியா சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை