உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / இலங்கைக்குள் திசைமாறிச் சென்ற ஆந்திர மீனவர்கள் 5 பேர் விடுவிப்பு

இலங்கைக்குள் திசைமாறிச் சென்ற ஆந்திர மீனவர்கள் 5 பேர் விடுவிப்பு

ராமேஸ்வரம் : இலங்கை கடல் எல்லைக்குள் திசைமாறிச் சென்ற ஆந்திர மீனவர்கள் 5 பேரை அந்நாட்டு கடற்படை சிறைபிடித்து சில மணி நேரத்திற்கு பின் விடுவித்தது.ஆந்திரா விசாகப்பட்டினத்தை சேர்ந்த 5 மீனவர்கள் கேரளா கொச்சியில் ஆழ்கடல் மீன்பிடி படகை விலைக்கு வாங்கிக் கொண்டு ஆந்திரா நோக்கி சென்றனர். இவர்கள் பாம்பன் பாலத்தை கடந்து செல்ல முடியாத நிலையில் நேற்று முன்தினம் மாலை தனுஷ்கோடி 3ம் மணல் தீடையை கடந்து விசாகப்பட்டினம் நோக்கி சென்றனர். அப்போது படகின் இன்ஜின் பழுதானதால் காற்றின் வேகத்தில் திசை மாறி இலங்கை நெடுந்தீவு அருகே சென்றது. இலங்கை கடற்படையினர் மீனவர்களை சிறை பிடித்து காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு கொண்டு சென்றனர். இதையறிந்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை தொடர்பு கொண்டு மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தினார். திசைமாறி வந்த மீனவர்களுக்கு உதவி செய்யுமாறு மத்திய அரசு , இலங்கை அரசை வலியுறுத்தியது. இதையடுத்து இலங்கை கடற்படை வீரர்கள் ஆந்திர மீனவர்களை விடுவித்து படகில் பழுதான இன்ஜினை சரிசெய்து அவர்களை நேற்று காலை ஆந்திராவுக்கு திருப்பி அனுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ